திமுக மாநாடு துவங்கியது

தி.மு.க.வின் 10வது மாநில மாநாடு திருச்சியில் இன்று துவங்கியது. மாநாட்டை அக்கட்சியின் தலைவர் தலைவர் கருணாநிதி கொடியேற்றி துவக்கி வைத்தார்.
திமுக மாநாடு துவங்கியது

தி.மு.க.வின் 10வது மாநில மாநாடு திருச்சியில் இன்று துவங்கியது. காலை 9 மணிக்கு குத்தூஸ் கலை நிகழ்ச்சிகள் கலை  நிகழ்ச்சியுடன் மாநாடு துவங்கியது.

காலை 10.45 மணிக்கு மாநாட்டு வளாகத்தில் அமைக்கப்பட்டிருந்த 90 அடி உயர கம்பத்தில் திமுக தலைவர் கருணாநிதி கொடியேற்றினார். இதையடுத்து மாநாட்டு மேடைக்கு வந்த கருணாநிதிக்கு கட்சி  நிர்வாகிகள் வரவேற்பு அளித்தனர்.

மாநாட்டு வரவேற்ப்புரையை முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு நிகழ்த்தினார். இதை தொடர்ந்து மா நாட்டு தலைவரை வரவேற்று திமுகவின் முன்னாள் அமைச்சர்  ஆற்காடு வீராச்சாமி, மாவட்ட செயலாளர்கள் வேலூர் காந்தி, தூத்துக்குடி பெரியசாமி, திண்டுக்கல்  ஐ.பெரியசாமி, ஆகியோர் பேசினர் .

மாநாட்டு திடலில் பெரியார் உருவப்படத்தை செல்வேந்திரன், அண்ணாத்துரை உருவப்படத்தை திருச்சி சிவா, தியாகராயர் உருவப்படத்தை முனைவர் சபாபதி, டி.எம். நாயர் உருவப்படத்தை கோவை ராமாநாதன் , டாக்டர் நடராசனார் உருவப்படத்தை பாரதி, மூவலூர் ராமாமிர்தம் உருவப்படத்தை சுப்பு லட்சுமி ஜெகதீசன் மற்றும் பாரதிதாசன் உருவப்படத்தை சத்தியவாணி முத்து ஆகியோர் திறந்து வைத்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com